இந்தியாவுக்கு உலக கோப்பை வெல்லும் வாயப்பு அதிகம்: டூப்பிளசிஸ்

இந்தாண்டு நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கே உள்ளது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
 | 

இதுகுறித்து  அவர் பேசும் போது, "உலக கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி வந்தவுடன் எங்களுக்கு ஒருவிதமான அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உலக கோப்பை வெல்லும் அளவுக்கு பலமான நிலையில் இருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டு உலக கோப்பையை வெல்லும் தகுதி முதலில் இந்திய அணிக்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதன்பின் இங்கிலாந்து அணிக்கு இருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது, ஏராளமான முயற்சிகளையும், நேரத்தையும் கோப்பையைவெல்ல செலவிட்டது நினைவிருக்கிறது. ஆனால், கடைசியில் தோல்வியை சந்தித்தோம்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP