இந்தியா வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி டி20ல் இருந்து ஓய்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 | 

இந்தியா வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி டி20ல் இருந்து ஓய்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி (35). வருகிற நவம்பர் மாதம் ஐசிசி-ன் உலக டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கோஸ்வாமி அறிவித்துள்ளார். 

68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோஸ்வாமி, 56 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அவருடைய எக்கனாமி ரேட் 5.45 ஆகும். 

இதனால் தற்போது கோஸ்வாமி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தவர் கோஸ்வாமி. 169 போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 

ஓய்வு குறித்து கோஸ்வாமி கூறுகையில், "எனக்கு அன்பும் ஆதரவுமளித்த பிசிசிஐ மற்றும் சக அணியினருக்கு என்னுடைய நன்றி. இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள்" என்றார்.

கோஸ்வாமி மற்றும் மித்தாலி ராஜ் மட்டுமே இந்திய மகளிர் அணியில் உள்ள வயதான வீராங்கனைகள். கோஸ்வாமி, 2002ம் ஆண்டு சென்னையில், இங்கிலாந்துக்கு எதிராக டி20ல் அறிமுகமானார். 

இருவரும் ஆடவர் அணிக்கே சவால் விடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP