1. Home
  2. விளையாட்டு

ஓய்வை அறிவிக்கலாம் என்றிருந்தேன்: தடை நீக்கம் குறித்து ஶ்ரீசாந்த்


இந்திய அணி வீரர் ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை இன்று உச்சநீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில் அவர் தனது ஓய்வு குறத்து அறிவிக்க இருந்ததாக ஶ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதற்காக சில நாள்கள் சிறையில் இருந்த ஶ்ரீகாந்த் மீது பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. ஆனால், இதற்காக நீதிமன்றப் படிக்கட்டு ஏறிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றியும் பெற்றார். ஆனால், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது.

பி.சி.சி.ஐயின் முடிவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் இன்று ஶ்ரீசாந்த் மீதான தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 3மாதத்தில் பரிசீலித்து முடிவெடிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஶ்ரீசாந்த், "நான் ஓய்வை அறிவிக்க இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like