கிரிக்கெட்டின் நேர்மைக்காக தடையை ஏற்கிறேன்: ஜெயசூர்யா

ஐசிசியின் ஊழல் ஒழிப்பு கமிட்டி தன் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து பேசியுள்ள சனத் ஜெயசூர்யா, தான் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்ததாகவும், தன் மீது எந்த குற்றசாட்டுகளும் இல்லாத போது என்று மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
 | 

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடைபெற்று வருவதாக ஐசிசியின் ஊழல் ஒழிப்பு கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் கேப்டனும், தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, தன்னிடமிருந்த ஆதாரங்களை வழங்காமல், கமிட்டியை திசை திருப்ப முயற்சித்ததாகவும், விசாரணையை தாமதிக்க முயற்சித்ததாகவும், ஜெய்சூர்யா மீது குற்றம்சாட்டப்பட்டது. இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதனால், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் 2 ஆண்டுகளுக்கு அவர் தடை செய்யப்படுவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஜெயசூர்யா பேசும் போது,  “நான் அனைத்து தகவல்களையும் அளித்தேன். எந்த வித ஊழல் குற்றச்சாட்டுகளோ, உள்தகவலைப் பரிமாறியதாகவோ எந்த வித குற்றச்சாட்டுகளும் என்  மீது இல்லை. என் மீதான தடை மிகவும துர்தர்ஷடவசமானது.

கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையைக் காக்கவே குற்றச்சாட்டுகளை  ஏற்றுக் கொண்டேன்.  என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான்  எப்போதும் நேர்மையைக் கடைபிடித்து ஆடிவந்துள்ளேன். நான் எப்போதும் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறேன். இதற்கு ரசிகர்களே சாட்சி” என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP