டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது?- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்

இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது டி-ஷர்ட்டில் பெயருக்கு மாற்றாக DK என இனிஷியலை மட்டும் பதிந்திருப்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 | 

டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது?- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்

இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது டி-ஷர்ட்டில் பெயருக்கு மாற்றாக இனிஷியலை மட்டும் பதிந்திருப்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். 

2018ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடந்து வருகிறது. இன்று  சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்ககொள்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கின் போது 18வது ஓவரை பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் வீசினார். அப்போது தனது தொப்பியை திருப்பி மாட்டிக்கொண்டார். இது சரியான செயல் அல்ல என்று போட்டி நடந்து கொண்டு இருந்த போதே நேரலையில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்தார். 

டி-சர்ட்டில் இப்படியா எழுதுவது?- தினேஷ் கார்த்திக்கிற்கு கவஸ்கரின் அட்வைஸ்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "இது போன்று பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் செய்து கொள்ளலாம். ஆனால் தேசிய அணிக்காக ஆடும்போது இப்படி செய்யக்கூடாது. இதை பாகிஸ்தான் கேப்டன் எடுத்துக் கூறியிருக்க வேண்டும்" என்றார். பின்னர் அடுத்த ஓவரை வீச வந்த ஃபகர் தனது தொப்பியை நடுவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். 

மேலும் பேசிய கவாஸ்கர், "தினேஷ் கார்த்தி தனது டி-ஷர்டில் டி.கே என்று குறிப்பிட்டுள்ளார். இதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் அடையாளம் காணும் விதமாக கார்த்திக் என்று பதியப்பட்டு இருக்க வேண்டும். அவரை கிரிக்கெட் வீரர்கள் பலர் டி.கே என்று அழைக்கிறார்கள். வேண்டும் என்றால் பெயருடன் தனது இனிஷியலையும் குறிப்பிட்டு கொள்ளலாம்" என அறிவுரை வழங்கி உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP