ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை கூறியமைக்கு, இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை கூறியமைக்கு, இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தி தனியார் தொலைக்காட்சியில் 'காபி வித் கரண்' எனும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்தியா முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து இடைநீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. பின்னர் அஇருவரும் மன்னிப்பு கோரவே, தடை நீக்கப்பட்டது. தற்போது இருவரும் இந்திய அணி சார்பில் விளையாடி வருகின்றனர். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்திருந்தது உச்ச நீதிமன்றம். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி, தற்போது இருவரும் அபராதங்களை அறிவித்துள்ளார். பாண்ட்யா, ராகுல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அபாரதத் தொகையினை 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP