கெயில் அதிரடி ஆட்டம்: டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.
 | 

கெயில் அதிரடி ஆட்டம்: டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், கெயிலும் களமிறங்கினர். 12 ரன்னில் அவுட் ஆகி ராகுல் ஏமாற்ற அளித்தாலும், கெயில் அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

அகர்வால் 2, மில்லர் 7, சாம் குர்ரன் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே பெவிலியர் திரும்பினர்.  ஆனால், மாந்தீப் சிங் இக்கட்டான நேரத்தில் நன்றாக ஆடி வந்தார். அதிரடியாக ஆடிய கெயிலும் (69 ரன்) அவுட் ஆனார். லாமிச்சனே பாலில் கெயில் அடித்த பாலை பவுண்டரி லைனில் பிடித்து இங்ராம் தூக்கி போட, அதை லாவகமாக அக்‌ஷர் பட்டேல் பிடித்தார். கெயில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசினார்.
மந்தீப் சிங்கும் (30 ரன்)  அவுட் ஆகி வெளியேற, அஸ்வினும் தன் பங்கிற்கு 16 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 

20 ஓவர்களின் முடிவில், கடைசி ஓவரில் ஹர்பிரித்தின் அதிரடி ஆட்டத்தால், பஞ்சாப் அணி  7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து, டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டெல்லி அணி தரப்பில் லாமிச்சனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP