டி.என்.பி.எல்: பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மதுரை அணி

திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி மதுரை பான்ந்தர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
 | 

டி.என்.பி.எல்: பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மதுரை அணி

திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி மதுரை பான்ந்தர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காரைக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.  அந்த அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்து  வெற்றி பெற்றது.

மதுரை அணிக்காக சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த ஆண்டு டி.என்.பி.எல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு சென்ற முதல் அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP