தோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

தோனி டீமில் நான் ஒரு 'முதலுதவிப் பெட்டி' (First-Aid Kit) மாதிரி என்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
 | 

தோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

தோனி டீமில் நான் ஒரு 'முதலுதவிப் பெட்டி' (First-Aid Kit) மாதிரி என்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழக வீரர்கள் விஜய் ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றனர். 4வது வீரராக அம்பதி ராயுடுக்கு பதிலாக விஜய் ஷங்கர் மற்றும் ரிஷப் பண்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக உணர்கிறேன். கடந்து 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றும் என்னால் எந்த போட்டியிலும் விளையாட முடியவில்லை.தினேஷ் கார்த்திக் அடுத்த உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவது கடினம் தான் என்று என் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

தோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

இருந்த போதிலும், தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றேன்.  அப்போது கூட தேர்வுக் குழுவின் தலைவர் எம்.கே. பிரசாத் என்னிடம் கூறும்போது, இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப்-க்கும்,  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் உங்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறேன் என்று தெளிவாகக் கூறியிருந்தார். அவருடைய வார்த்தையில் தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மை இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதேபோன்று எனது திறமையை கருத்தில்கொண்டு, உலகக்கோப்பை அணியில் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்யும் திறமை எனக்கு உள்ளது. எனவே, நான்காவது வீரர் ஆனாலும் சரி, பினிஷராக வாய்ப்பு கொடுத்தாலும் சரி, நான் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

தோனி பங்கேற்கும் உலகக்கோப்பை அணியில் நானும் விளையாடுவது உண்மையிலே என்னுடைய அதிர்ஷ்டம் தான். தோனி டீமில் நான் ஒரு 'முதலுதவிப் பெட்டி' (First-Aid Kit) மாதிரி . பெரும்பாலான போட்டிகளில் தோனி தான் விக்கெட் கீப்பராக இருப்பார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் மட்டும் நான் விக்கெட் கீப்பராக இருப்பேன். எனவே, தோனிக்கு காயம் பட்டால், நான் 'முதலுதவிப் பெட்டி' மாதிரி.

தோனி டீமில் நான் 'முதலுதவிப் பெட்டி' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

உலகக்கோப்பை தொடரில் நான் அல்லது ரிஷப் பண்ட், இருவரில் யாரை தேர்வு செய்திருந்தாலும், அது மற்றொருவருக்கு ஏமாற்றம் தான். அந்த வகையில், என்னை தேர்வு செய்துள்ளது, ரிஷப் பண்ட்-க்கு கண்டிப்பாக ஏமாற்றமாக தான் இருந்திருக்கும். அவரை தேர்வு செய்திருந்தால் எனக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். 

விஜய் ஷங்கரை பொறுத்தவரையில், என்னுடன் தமிழில் பேச, ஒரு தமிழக வீரர் அணியில் உள்ளார் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்வப்போது எனது இட்லி, தோசை கனவுகளையும் நான் அவர் மூலமாக நிறைவேற்றிக்கொள்வேன்" என்று தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP