உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இருக்க வேண்டும்: கவாஸ்கர் ஆதரவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாத நிலையில் உலகக்கோப்பைக்கான அணில் அவர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 | 

உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இருக்க வேண்டும்: கவாஸ்கர் ஆதரவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாத நிலையில் உலகக்கோப்பைக்கான அணில் அவர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கு முன்பான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் போது, "கே.எல். ராகுல், அஜிங்கிய ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோரைச் சேர்ப்பதைக் காட்டிலும், தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பைப் போட்டிக்கு எடுக்கலாம். மிகச்சிறந்த தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக் இருப்பார்.

14வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால், இங்கிலாந்தில் பந்து நன்றாகஸ்விங் ஆகும். அப்போது இந்திய அணி ஹர்திக்பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கலாம். கலீல் அகமெட், முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்திருக்கலாம்.

அணியில் எப்போதும் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றிக் களமிறக்கும் போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அனுபவம் இருப்பதால், அவரால் ஒருநாள் போட்டியிலும் ஜொலிக்க முடியும். ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் என நம்புகிறேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP