தனி ஆளாக கெத்துக்காட்டிய தினேஷ் கார்த்திக்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற 176 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.
 | 

தனி ஆளாக கெத்துக்காட்டிய தினேஷ் கார்த்திக்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற 176 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுப்மன் கில் களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரிலேயே வருண் ஆரோன் வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் கிறிஸ் லின். இதைத் தொடர்ந்து வந்த ரானா, கில் ஜோடி 32 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 14 ரன்னில் ஆரோன் பந்தில் வெளியேறினார். 

இவரைத் தொடர்ந்து, ரானா 21, சுனில் நைரன் 11  ரன்னில் அவுட் ஆனார்கள். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் அதிரடி காட்டிய ரசுல் 14 ரன்களிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வலது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே ரசுலால் சரியாக ஆட முடியாமல் போனது. பெர்த்வெயிட் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஒரு பக்கம் தனியாளாக நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். அதன் பிறகு ராஜஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவும், தெறிக்கவும் விட்டார். 96 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக், ஆட்டத்தின் கடைசி பாலில் பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் அவர் ஆடிய ஆட்டம் அற்புதம்.

20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்து, ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 176 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 50 பாலில் 97 ரன்கள் அடித்தார். அதில் சிக்ஸர் 9, பவுண்டரி 7. ராஜஸ்தான் அணி தரப்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP