டி20லிருந்து விலகுவது குறித்து தோனி தான் முடிவெடுக்க வேண்டும்: ப்ராவோ

தான் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டையின் ப்ராவோ தெரிவித்துள்ளார்.
 | 

டி20லிருந்து விலகுவது குறித்து தோனி தான் முடிவெடுக்க வேண்டும்: ப்ராவோ

தான் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ப்ராவோ தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் தோனி இடம்பெறவில்லை. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பிரசாத், புதிய விக்கெட் கீப்பரை தயார்படுத்தவே தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். 

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியிலும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்தது. மேலும் தோனியின் டி20 வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் பலர் கூறினர். 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தோனி இப்போதும் உலகின் மிக சிறந்த வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். அவர் போன்ற ஒரு வீரர் விலகுவது குறித்து அவர் மட்டும் தான் முடிவெடுக்க முடியும். மீண்டும், மீண்டும் தோனி தன்னை நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP