உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோனி மிக மிக முக்கியம்: யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அனுபவம், அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிக மிக அவசியமாக இருக்கும், என ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோனி மிக மிக முக்கியம்: யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அனுபவம், அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிக மிக அவசியமாக இருக்கும், என ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 அரை சதங்கள் விளாசிய தோனி, நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். மிடில் ஆடரில் தோனி இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். இந்நிலையில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், அடுத்த உலகக் கோப்பை ஒருநாள் தொடரில், தோனியின் பங்கு மிக முக்கியம், என தெரிவித்துள்ளார். "தோனியிடம் ஒரு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது. விக்கெட் கீப்பராக இருப்பது, போட்டியை கவனிக்க ஒரு நல்ல இடத்தை அவருக்கு வழங்குகிறது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து, சிறந்த கேப்டனாக விளங்கினார். இளம் வீரர்கள், கோலி உள்ளிட்டோரை சிறப்பாக வழி நடத்தியுள்ளார்" என்றார்.

மேலும், "அணியில்தோனியும் அவருடைய அனுபவமும் மிகவும் முக்கியம். ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடினார். முன்பை போல பந்தை அவர் விளாசுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று யுவராஜ் சிங் பாராட்டினார்.

இளம் வீரர் ஷுப்மான் கில், வேகமாக வளர்ந்து வருவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார். "அவர் எப்படி இவ்வளவு சிறிய காலத்தில் பெரிய இடத்திற்கு சென்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது. 'இந்தியா ஏ' அணியிலிருந்து திரும்பியவுடன், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அதனால், உடனே அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார் யுவராஜ்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP