இப்பவும் தோனி தான் இந்திய அணியை வழிநடத்துகிறார்: ரோகித் சர்மா

தோனி இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி செல்கிறார் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
 | 

இப்பவும் தோனி தான் இந்திய அணியை வழிநடத்துகிறார்: ரோகித் சர்மா

தோனி தான் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி செல்கிறார் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தோனியுடன் இருக்கும்போது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களை அமைதியாக உணர்வர். களத்திலும் சரி, டிரெசிங் அறையிலும் சரி தோனி எங்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை நாங்க்ள பார்த்து வருகிறோம். 

தோனியின் அறிவுரை கேப்டன் கோலிக்கு பயன்படுகிறது. அவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக அணியை வெற்றிகரமான கேப்டனாக வழிநடத்தி வந்தார். அதனால் அவர் அணியில் இருக்கும்போது, எப்போதும் உதவியாக இருக்கிறார். சொல்லப்போனால் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.

பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடும்போது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் முக்கியம். இந்த வகையில் நிறைய ஆட்டங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளார். ஆட்டத்தின் போக்கு குறித்து அவரது தெளிவான சிந்தனையும், அறிவுரைகளும் அணிக்கு மிகவும் அவசியப்படுகிறது.

மேலும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் அவர் பக்கபலமாக இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும்கூட அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை தோனி அளிக்கிறார். உலக கோப்பை போட்டியிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்" என்றார் ரோகித். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP