இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி: பிஷன் சிங் பேடி பெருமிதம்!

டெல்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான விருந்திற்கு பிறகு பேசிய இந்திய அணியின் முன்னாள் வீர்ர பிஷன் சிங் பேடி, எம்.எஸ். தோனி இந்திய அணியின் பாதி கேப்டன் என தெரிவித்தார்.
 | 

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி: பிஷன் சிங் பேடி பெருமிதம்!

டெல்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான விருந்திற்கு பிறகு பேசிய இந்திய அணியின் முன்னாள் வீர்ர பிஷன் சிங் பேடி எம்.எஸ்.தோனி இந்திய அணியின் பாதி கேப்டன் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் உள்ளன. இதனையடுத்து நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும்.

இந்நிலையில், இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு டெல்லியில் ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பாதி கேப்டனாக தோனி உள்ளார். 4வது போட்டியில் அவர் இல்லாத நிலையில் கோலி மிகவும் கடினமாக காணப்பட்டார். 

தோனிக்கு ஏன் 2 போட்டிகளில் ஓய்வு அளித்தார்கள் என தெரியவில்லை. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . அவர் இளம் வயது வீரர் இல்லை என்றாலும் தற்போது தேவைப்படுகிறார். அணி வீரர்களை அமைதிப்படுத்தும் தன்மை தோனியிடம் உள்ளது. கேப்டன் கோலியும் அவரை சார்ந்து தான் இருக்கிறார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் தான் உள்ளன. மேலும் ஐபிஎல் தொடர் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்" என பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP