கேப்டனாக தோனி, கோலி சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி, தோனி ஆகியோரின் சாதனையை தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார். அவர் தலைமையில் 14 போட்டிகள் விளையாடி உள்ள இந்திய அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது.
 | 

கேப்டனாக தோனி, கோலி சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி, தோனி ஆகியோரின் சாதனையை தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது டி20 போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்விடைந்தது. இதனையடுத்து நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை 14 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் இருந்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

முன்பு கேப்டனாக 14 போட்டிகளை கடந்த பிறகு தோனி மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணி 8 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் அவர்கள் சாதனையை  ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார். 

சர்வதேச அளவில் இந்த சாதனையை க்ளார்க்குடன் சமன் செய்துள்ளார் ரோஹித் ஷர்மா. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP