மாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு

பெங்களூருவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 203 ரன்கள் இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.
 | 

மாஸ் காட்டிய டிவில்லியர்ஸ், ஸ்டொனியிஸ்; ஆர்சிபி 202 ரன்கள் குவிப்பு

பெங்களூருவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 203 ரன்கள் இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எப்பொழுதும் போல, கேப்டன் கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர்.

கோலி 13 ரன்னில் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேற, வந்த டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேலும் ஜோடி சேர்ந்து விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்க்க வேண்டி, கவனமாக ஆடி வந்தனர். அதிரடியுமாக ஆடிய பார்த்தீவை (24 பால்லில் 43 ரன்னில்) முருகன் அஸ்வின் தூக்கினார்.

பின்னர் வந்த மொயின் அலி 4, அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். பிறகு வந்த ஸ்டொனியிஸ், டிவில்லியர்ஸ்க்கு நன்கு ஒத்துழைக்க, பொறுமையாக ஆடி வந்த டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்த பிறகு, தனது அதிரடியை காட்டத் தொடங்கினார்.

பெங்களூரு அணி 18 ஓவர்களின் முடிவில் 154 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டொனியிசும் அதிரடியாக ஆட, 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 203 ரன்கள் நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பாலில் 88 ரன் (சிக்ஸ் 7, பவுண்டரி 3), ஸ்டொனியிஸ் 34 பாலில் 46 ரன்கள் (சிக்ஸ் 3, பவுண்டரி 2) அடித்தனர். இந்த ஜோடி 66 பாலில் 121 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 66 ரன்கள் அடித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP