மும்பையை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பன்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 | 

மும்பையை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பன்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிரடி வீரர் ரிஷப் பன்ட் 78 ரன்கள் விளாச, இங்கிராம் 47 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. சரியான பார்ட்னர்ஷிப் அமையாமல் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்த நிலையில், அதிரடி வீரர் யுவராஜ் சிங் அரைசதம் அடித்தார். க்ருனால் பாண்ட்யா 32 ரன்கள் அடிக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர் பொல்லார்டு 27 ரன்களில் அவுட்டானார்.

 சரியான இடைவேளையில் விக்கெட் எடுத்து, மும்பைக்கு டெல்லி நெருக்கடி கொடுக்க, 176 ரன்களில் மும்பை ஆல் அவுட் ஆனது. 37 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றியுடன் ஐபிஎல் தொடரை டெல்லி துவக்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP