சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ்... ஃபைனலுக்கு முந்திப் போவது யாரு?

சிஎஸ்கே கேப்டன் தோனி, இத்தொடரில் தான் இதுவரை விளையாடி போட்டிகளில், 122.66 புள்ளிகள் சராசரியுடன், மொத்தம் 368 ரன்களை குவித்துள்ளார் என்பது தான் சிஎஸ்கேவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆறுதலான அம்சம்.
 | 

சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ்... ஃபைனலுக்கு முந்திப் போவது யாரு?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளில் யார் உங்களின் சாய்ஸ் எனக் கேட்டால், நம்மில் பெரும்பாலோரின் விருப்பம் சிஎஸ்கேவாக தான் இருக்கும். 

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் அல்லது வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டாலும், நம்மில் அனேகமானவர்களின் சாய்ஸ் சென்னை அணியாக தான் இருக்கும்.

ஆனால், ஐபிஎல்லில் இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 27 போட்டிகளில் 15 முறை சென்னை அணியை வெற்றி கொண்டுள்ளது, ப்ளே -ஆப் சுற்றில் சென்னையுடன் விளையாடியுள்ள ஏழு போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ளது, சென்னை அணியை அதன் சொந்த மண்ணான சேப்பாக்கத்திலேயே பதம் பார்த்தது, சிஎஸ்கேவுக்கு இணையாக, ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வெற்றுள்ளது என மும்பை அணியும், சிஎஸ்கேவுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்பது தான் இன்று கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவை ஒப்பிடும்போது, மும்பை அணி ஒருபடி மேலாக உள்ளதென்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு நாம் சொல்வதற்கு காரணம்,  ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராய்டு, கேதர்  ஜாதவ் என, சென்னை அணியின் டாப் -ஆர்டர் பேட்ஸ்மேன் யாரும், இந்த ஐபிஎல் தொடரில் சீரான, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ்... ஃபைனலுக்கு முந்திப் போவது யாரு?

சிஎஸ்கே கேப்டன் தோனி, இத்தொடரில் தான் இதுவரை விளையாடி போட்டிகளில், 122.66 புள்ளிகள் சராசரியுடன், மொத்தம் 368 ரன்களை குவித்துள்ளார் என்பது தான் சிஎஸ்கேவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆறுதலான அம்சம். 

பந்துவீச்சை பொருத்தவரை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வழக்கம்போல் இன்றும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சிஎஸ்கேவின் மூம்மூர்த்திகளான ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது சுழலில் கலக்குவார்கள் என்பது நிச்சயம். 

சென்னையில் வெயில் கொளுத்தும் காலம் என்றாலும், சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், இரவு நேரத்து பனியும், சேப்பாக்கத்தில் இன்றும் தன் பணியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இவர்களுக்கு போட்டியாக, மும்பை அணியின் குர்னால் பாண்டியா, அனுகுல் ராய், ராகுல் சாஹர் ஆகியோரும் தங்களின் சுழலில் சென்னை அணிக்கு நெருக்கடியை தருவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ்... ஃபைனலுக்கு முந்திப் போவது யாரு?

இவர்களை விட முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது, நெருக்கடியான நிலைகளில் நிதானமாக நின்று ஆடி, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அனுபவம் மிக்க மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தான்.  

லீக் போட்டியில்  இதே சேப்பாக்கத்தில் இவர் 48 ரன்கள் அடித்ததும், கொல்கத்தா அணிக்கு எதிரான  கடைசி லீக் ஆட்டத்தில் 55 ரன்கள் எடுத்து நல்ல ஃபார்மில் இருப்பது, சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி கிடையாது. 

இவருடன் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கும் டி -காக்கும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே, இந்த ஓப்பனிங் ஜோடியை எவ்வளவு சீக்கிரம் சிஎஸ்கே பௌலர்கள் பிரிக்கிறார்கள் என்பது  இன்றைய ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.

மொத்தத்தில், தல தோனி, சேப்பாக்கம் மைதானம் மற்றும் உள்ளூர் ரசிகர்கள் சென்னை அணிக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. சென்னையை ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த மும்பை அணி சற்று பலம் பொருந்தியதாக இருந்தாலும், தோனி இருப்பதால் சென்னை  சூப்பர் கிங்ஸ் தான் இன்று வெற்றி பெறும் என நாம் நிச்சயம் நம்பலாம். மேட்ச் பார்க்க நீங்க ரெடியா..?!

 வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP