வாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் !

176 ரன்கள் வெற்றி இலக்கு என்பது, சென்னை அணிக்கு அவ்வளவு ஒன்றும் கடினமான ஸ்கோர் கிடையாது தான். ஆனால், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சிஎஸ்கேவின் தொடக்க வீரரான டூப்ளசிஸின் விக்கெட் வீழ்த்தி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஹைதராபாத்.
 | 

வாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் !

சில போட்டிகளில் தொடக்கம் சரியில்லையென்றாலும், முடிவு சுபமாகவே இருக்கும். ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு அப்படி தான் அமைந்தது.

அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிராஸ்டோவின் விக்கெட்டை, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே சிஎஸ்கே அணியினர் பறித்தனர். ஆனால், அதன் பிறகு டேவிட் வார்னருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் வார்னர் தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்ஸர் என விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை நெருங்கியது. கைசவம் ஒன்பது விக்கெட்டுகள் இருப்பதால், அடுத்த பத்து ஓவர்களில் குறைந்தபட்சம் மேலும் 100 ரன்களை எடுத்து, ஹைதராபாத்  அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பை பொய்ப்பிக்க செய்யும் வேலையை ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சிஎஸ்கே பெளலர்கள் கச்சிதமாக செய்து முடித்தனர்.

ஆம்...  ஆட்டத்தின் 14 ஓவரில், வார்னர்  57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரான "தல" தோனி, ஸ்டெம்பிங் செய்து அவரை வெளியேற்றார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 120/2. 15 ஓவரின் முடிவில் அதே 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள்.

வாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் !

கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், ஆட்டத்தின் முக்கியமான கடைசி 5 ஓவர்களில், ஹைதராபாத் அணி வீரர்கள் அதிரடி காட்டியிருந்தால், நிச்சயமாக 190 -200 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால், சிஎஸ்கேவின் பிராவோவும், சாஹரும் கடைசி ஓவர்களில் அருமையாக பந்துவீசி, எதிரணியின் ஸ்கோரை 175-க்கு கட்டுப்படுத்தினர்.

176 ரன்கள் வெற்றி இலக்கு என்பது, சென்னை அணிக்கு அவ்வளவு ஒன்றும் கடினமான ஸ்கோர் கிடையாது தான். ஆனால், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சிஎஸ்கேவின் தொடக்க வீரரான டூப்ளசிஸின் விக்கெட் வீழ்த்தி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஹைதராபாத்.

 இருப்பினும், ஷேன் வாட்சனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு, "சின்ன தல" சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு ஓவர்களின் முடிவில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சிஎஸ்கே அணியின் ஸ்கோர், இந்த  இருவரும் ஜோடி சேர்ந்ததும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

குறிப்பாக வாட்சன், ஹைதராபாத் அணி பௌலர்களின் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.  அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷீத் கான், சந்தீப் என, அனைத்து பௌலர்களின் பந்துகளையும் பராபட்சமின்றி அடித்து நொறுக்கியது வாட்சன் - ரெய்னா ஜோடி.

வாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் !

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுநாள்வரை சரியாகவே விளையாடவில்லை...ஓபனிங்கில் இல்லாமல், பேட்டிங் வரிசையில் இடம்மாற்றி இறக்கிவிடலாமே... என்ற தன் மீதான எல்லா விமர்சனத்துக்கும், வாட்சன் நேற்று தன் மாயாஜால பேட்டிங்கின் மூலம் பதிலளித்துவிட்டார்.

சிக்ஸர், பவுண்டரி என ரன் மழை பொழிந்து, 96 ரன்கள் எடுத்த வாட்சனின் விஸ்வரூப ஆட்டத்தின் மூலம், சிஎஸ்கே ரசிகர்கள் மற்றொரு வெற்றியை நேற்று தரிசித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதியில் இரண்டு பந்துகளில், வெற்றிக்கு ஒரேயொரு ரன் தேவையென்ற நிலையில், ஜாதவ் அதனை எளிதாக எடுத்து போட்டியை சுபமாக முடித்து வைத்தார்.

இந்த வெற்றியின் மூலம்,  புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ள  சென்னை அணி, ப்ளே -  ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ப்ளே - ஆஃப் சுற்றிலும், சென்னை பாய்ஸ்களின் அதிரடி வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP