தொடரும் மழை; இந்தியா - இங்கிலாந்துக்கு மதிய உணவு இடைவெளி

லார்ட்ஸில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்னதாகவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு மதிய உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது.
 | 

தொடரும் மழை; இந்தியா - இங்கிலாந்துக்கு மதிய உணவு இடைவெளி

லார்ட்ஸில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்னதாகவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு மதிய உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெறுகிறது. இன்று இந்திய நேரப்படி பிற்பகல் தொடங்க இருந்த போட்டி, மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நிற்க, இரு அணி வீரர்களும் காத்திருந்தனர். 

ஆனால் தொடர்ந்து பெய்து வந்த மழையால், முன்னதாகவே மதிய உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது. லார்ட்ஸில் இருந்து வெளியாகியுள்ள செய்தியில், தற்போதைக்கு மழை நிற்கும் அறிகுறியே தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP