ஐபிஎல் : பிளே ஆஃப் சுற்றில் சென்னை - மும்பை அணிகள் மோதல்!

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
 | 

ஐபிஎல் : பிளே ஆஃப் சுற்றில் சென்னை - மும்பை அணிகள் மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் (ப்ளே ஆஃப்) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.  

ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து  பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இதில், லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இவ்விரு அணிகளும் ப்ளே -ஆப் சுற்றில் இதுவரை ஏழு போட்டிகளில் மோதியுள்ளன. அதில், நான்கு போட்டிகளில் சென்னை அணியும், மூன்று போட்டிகளில் மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP