சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் : கலக்கப் போவது யாரு?

நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்க துடித்துக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியும், சென்னை சேப்பாக்கத்தில் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.
 | 

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் : கலக்கப் போவது யாரு?

நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்க துடித்துக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியும், சென்னை சேப்பாக்கத்தில் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.

இரு அணிகளும் இடையே, இதற்கு முன்பு மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், இன்றைய கதை வேறு.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கடந்த 2015 -க்கு பிறகு, சிஎஸ்கே அணி இன்றுதான் முதல் முறையாக, மும்பையை எதிர்கொள்ள உள்ளது. அத்துடன் 2010 -லிருந்து இதுநாள், சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் சென்னை அணியை மும்பை அணி வீழ்த்தியதே இல்லை. அத்துடன், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியிடமும் சிஎஸ்கே இங்கு தோற்றதே இல்லை. இந்த சாதனைகள் இன்றும் தொடர வேண்டும் என்பதே, சிஎஸ்கே கேப்டன் தல தோனி அண்ட் கோவின் விருப்பமாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் : கலக்கப் போவது யாரு?

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியையும் அவ்வளவு எளிதாக எடை போட்டுவிட முடியாது.  இந்த தொடரில் ஆரம்பத்தில் அருமையாக ஆடிவந்த இந்த அணிக்கு, சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, வெற்றிப் பயணத்தில் இடைச்சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடம் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், இன்றைய போட்டியுடன் சேர்த்து, மீதமுள்ள நான்கு  லீக் போட்டிகளில், குறைந்தபட்சம் இரண்டு ஆட்டங்களிலாவது வென்று, ப்ளே -ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய மும்பை பாய்ஸ் இன்று முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஷேன் வாட்சன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஃபாமிற்கு வந்துள்ளது சென்னை அணிக்கு நற்செய்தியாகும். இருப்பினும், சிஎஸ்கேவின் டாப் - ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்போது விளையாடுவார்கள்?  எப்போது  ஃபார்ம் -அவுட் ஆவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதது தோனி அண்ட் கோவின் மிகப்பெரிய குறை. ஆனாலும், சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து, பந்து வீச்சாளர்கள் சிலர் மாற்றப்படலாமே தவிர,  ஒட்டுமொத்த சிஎஸ்கே  அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது.

மும்பை அணியிலும், வேகப்பந்து வீச்சாளர் இசான் கிஷன் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, இந்த அணியிலும் முந்தைய போட்டியில் விளையாடி வீரர்களே அனேகமாய் இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். சென்னை அணியின் டூ்ப்ளசிஸும், மும்பை அணியின் ரோஹித் சர்மாவும் எதிரணியினருக்கு சவாலாக இருப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் : கலக்கப் போவது யாரு?

பிட்ச் நிலவரம்: சென்னை -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு முன்பு, இங்கு நடைபெற்றுள்ள 4 லீக் போட்டிகளில், முதல் பேட்டிங்கில் எடுக்கப்பட்ட சராசரி ரன் விகிதம் 128.5 தான்.
இதன் காரணமாக. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானம், இத்தொடரில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக உள்ளது என்ற விமர்சனம் பலதரப்பிலும் எழுப்பப்பட்டது. இதையடுத்து பிட்ச்சின் தன்மை சற்று மாற்றப்பட்டுள்ளதால், வேகப்பந்து வீச்சாளர்களும் இன்று சோபிக்க வாய்ப்புள்ளது.

வானிலை : சென்னை சேப்பாக்கம்... இரவு ஆட்டம் என்றதும் காற்றின் ஈரப்பதம் தான் முதலில் நியாபகம் வருகிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஈரப்பதம் இன்றும் முக்கிய பங்கு வகிக்கும்.  30 -32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவும் என்பதால், இதமான சூழலில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், சிஎஸ்கே ரசிகர்களின் கண்ணுக்கு மற்றொரு விருந்து இன்றிரவு காத்திருக்கிறது.  வாங்க.. மேட்ச் பார்க்கலாம்....

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP