பெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2019ன் முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 | 

பெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2019ன் முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியன்களான சென்னை அணியின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. சென்னை வீரர்களின் சூழற்பந்துவீச்சில் பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கோலி, டி வில்லியர்ஸ் உட்பட 3 முக்கிய விக்கெட்களை ஹர்பஜன் சிங் வீழ்த்த, இம்ரான் தாகிர் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். கடைசிவரை நின்ற பெங்களூரின் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல், 29 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 70 ரன்களுக்கு பெங்களூரு அணி ஆல் அவுட்டானது.

வெறும் 71 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் தடுமாறி டக்கவுட் ஆனார். அதன்பின் சென்னை வீரர்கள் நிதானமாக விளையாடினர். துவக்க வீரர் ராயுடு 28 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் அடித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றியுடன் கோப்பையை துவக்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP