சென்னையா, மும்பையா? அனல் பறக்கும் ஐ.பி.எல்., பைனல் 

மாெத்தத்தில் நாளைய போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாகும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தல தோனியா, மும்பை ரோஹித்தா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 | 

சென்னையா, மும்பையா? அனல் பறக்கும் ஐ.பி.எல்., பைனல் 


கிரிக்கெட் ரசிகர்களின் கோடை திருவிழாவான, ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை ஐதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மாவின், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. 

இவ்விரு அணிகளுமே, ஏற்கனவே, தலா மூன்று முறை சேம்ப்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில், நான்காவது முறையாக ஐபிஎல் சேம்ப்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதுவரை நடைபெற்ற தொடர்களில், சென்னை - மும்பை அணிகள் மூன்று முறை இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன.

அதில், மும்பை அணி இரு முறையும், சென்னை ஒரு முறையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில், மூன்றாவது முறையாக, பைனலில் சென்னையை தோற்கடிக்கும் முனைப்புடன் மும்பை அணியும், அந்த அணியை எப்படியும் இம்முறை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையும் களம் இறங்குகின்றன. 

அதிரடி இளம் வீரர்களை கொண்டுள்ள மும்பை அணிக்கும், மூத்த வீரர்கள் அடங்கிய சென்னை அணிக்கும் இடையிலான போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதால், இந்த பைனல், ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

ரோஹித் சமார், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது, மும்பை அணிக்கு கூடுதல் பலம் என்றாலும், கேப்டன் ரோஹித் சர்மா தன் முழுமையான பார்முக்கு வராதது பைலனிலும் தொடர்ந்தால் சற்று சிக்கலே. எனினும், பாண்டியா, பொல்லார்டு போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள், கடைசி நேரத்தில் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள் என்பதால், அந்த அணிக்கு கூடுதல் பலம் என்றே கூறலாம். பேட்டிங் வரிசை சாதித்தால், கண்டிப்பாக மும்பை அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. 

ஜஸ்பிரிட் பும்ரா, ராகுல் சஹார், லசித் மலிங்கா உள்ளிட்ட பவுலர்கள், எதிரணி வீரர்கள் நிலைகுலையச் செய்யும் வல்லமை படைத்தவர்கள். எனவே, பவுலிங்கிலும், மும்பை அணி இப்போது வரை கிங் தான் எனலாம். 

மும்பை அணியின் சார்பில், பைனலில், ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியால, மிட்சேல், சஹார், மலிங்கா, பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்புள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே சூப்பரான சீனியர்கள் நிறைந்த அணியாக உள்ளது. வாட்சன், ரெய்னா உமள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கர், எப்போது சூறாவளியை ஆரம்பிப்பார்கள் என்றே எதிரணியால் கணிக்க முடியாது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த வாட்சன், பைனலிலும் கலக்கினால், எதிரணி நிலைகுலைவது உறுதி. 

கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ரெய்னா, பைனலில் மீண்டும் அதிரடி அவதாரம் எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு பக்க பலமாக அம்பத்தி ராயுடுவும் இருப்பதால், பலமான பேட்டிங் வரிசை என்றே கூறலாம். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கேப்டன் கூல், தல தோனிக்கு மேல், ஒரு பலமான பேட்ஸ்மேன் தேவையா? அந்த அளவுக்க ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றி வாகை சூடும் வல்லமை படைத்தவர் மகேந்திர சிங் தோனி. எனவே, பைனில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அதிரடி அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், பிராவோ உள்ளிட்டோரின் பந்து வீச்சு, பைனலில் அதற்கு ஏற்ற வகையில் அமையும் என்பதில் சந்தேகிப்பதிற்கில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வாட்சன், பாப் டூ ப்ளசிஸ், ரெய்னா, அம்பத்தி ராய்டு, தோனி, பிராவோ, ஜடேஜா, சஹர், ஹர்பஜன் சிங், தாகுர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர், பைனலுக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. 

மாெத்தத்தில் நாளைய போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாகும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தல தோனியா, மும்பை ரோஹித்தா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP