ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பும்ரா நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஜாஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. முஹம்மது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 | 

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பும்ரா நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள்களே உள்ள நிலையில், அத்தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. அதற்கு அடுத்து வரும் நியூஸிலாந்து தொடரில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றுவதற்கு உறுதுணையாக இருந்தவர் பும்ரா . அவர் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பும்ராவின் பணிச்சுமை அதிகரித்ததால், அவருக்கு ஓய்வு அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பும்ராவுக்கு பதிலாக முஹம்மது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பந்து வீச்சாளரானசித்தார் கவுலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரின்போது பும்ராவுக்கு அதிகமான பணிச்சுமை இருந்ததால், அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பரிந்துரை செய்திருந்ததை பி.சி.சி.ஐ. ஏற்றுக் கொண்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP