விராட் கோலியை வீழ்த்திய சிறுவன்!

இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், 19 வயதேயான இளம் வீரர் ஆரன் மார்க் ஹார்டியின் பந்தில் அவுட்டானார். துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டையும் ஹார்டி வீழ்த்தி அசத்தினார்.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டி20 தொடரை சமன் செய்தபின், டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது. அதற்கான பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அசோசியேஷன் லெவன் அணியுடன் இந்தியா மோதியது. முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில், விராட் கோலி சிறப்பாக விளையாடி 64 ரன்கள் விளாசினார். ஆனால், இளம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆரன் மார்க் ஹார்டியின் பந்தில் கோலி அவுட்டானார்.

19 வயதேயான ஹார்டி, கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா உட்பட 4 பேரின் விக்கெட்களை வீழ்த்தினார். வெறும் 50 ரன்களை மட்டுமே ஹார்டி கொடுத்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதேபோல கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை ஹார்டி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP