புவனேஸ்வர் அதிரடி; 2 விக்கெட் இழந்து தடுமாறும் பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் இன்றைய 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி இமாம் உல் ஹக் மற்றும் பாக்கர் ஜமான் துவக்க வீரர்களாக களம் கண்டனர்.
 | 

புவனேஸ்வர் அதிரடி; 2 விக்கெட் இழந்து தடுமாறும் பாகிஸ்தான்

புவனேஸ்வர் அதிரடியால் துவக்க வீரர்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறி கொண்டிருக்கிறது. 

ஆசிய கோப்பையில் இன்றைய 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி இமாம் உல் ஹக் மற்றும் பாக்கர் ஜமான் துவக்க வீரர்களாக களம் கண்டனர். 

நேற்று ஹாங்காங்குடனான போட்டியில் 9 ஓவர் வீசி 50 ரன் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் இருந்தார் புவனேஸ்வர். 

இந்த நிலையில் அதிரடியான ஃபார்முடன் இன்று பந்துவீசிய அவர், இரண்டாவது ஓவரில் உல்-ஹக் (2) விக்கெட்டை எடுத்தார். அவரது பந்தை எதிர்கொண்ட உல்-ஹக், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனை தொடர்ந்து, 4-வது ஓவருக்கு மீண்டும் பந்துவீச வந்தார் புவனேஸ்வர். அப்போது பாக்கர் ஜமான், சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இதனால், 2 ரன்னில் 2 விக்கெட் என பாகிஸ்தான் விளையாடி வருகிறது. பாபர் அசாம் - ஷோயிப் மாலிக் சேர்ந்துள்ளனர். 

neewstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP