பொறுமையை இழந்து இருவரை தாக்கிய பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பிரிஸ்டல் நைட்கிளப் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று ஆஜரானார். விசாரணையில் தகராறின் போது, பொறுமையை இழந்த ஸ்டோக்ஸ், இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

பொறுமையை இழந்து இருவரை தாக்கிய பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பிரிஸ்டல் நைட்கிளப் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று ஆஜரானார். விசாரணையில் தகராறின் போது, பொறுமையை இழந்த ஸ்டோக்ஸ், இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, பிரிஸ்டலின் கிளிப்டன் ட்ரையாங்கில் ஏரியாவில், நைட்கிளப்பிற்கு வெளியே, பென் ஸ்டோக்ஸ் (27), ரியான் ஹாலே (27), ரியான் அலி (28) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரியான் அலி, அவசர சேவை மையத்திலும், ராணுவத்தில் ஹாலேவும் பணி புரிந்து வருகின்றனர். 

இதற்கிடையே, நேற்று இந்த தகராறு தொடர்பான விசாரணை ஆரம்பித்தது. இது ஒரு வாரத்திற்கும் நீடிக்கும் என்பதால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டோக்ஸ் விலகினார். 

இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் விசாரணையில் ஆஜரானார் ஸ்டோக்ஸ். விசாரணையில், நைட்கிளப்பில் இருந்து ஸ்டோக்ஸ், 12.46 மணிக்கே வெளியே வந்துவிட்டார். ஆனால், 2.08 மணியளவில் மீண்டும் ஸ்டோக்ஸ் தனது நண்பர் ஹேல்ஸுடன் மீண்டும் கிளப்பிற்கு சென்றுள்ளார். 

நைட்கிளப் அந்த நேரத்தில் மூடப்பட்டதால், ஸ்டோக்ஸ் மற்றும் அவரது நண்பர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் கிளப்பிற்கு வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரிகளை, அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார் ஸ்டோக்ஸ். தவிர, அங்கு இருந்த கை பர்ரி - வில்லியம் ஓ'கானர் என்னும் ஓரினசேர்க்கையாளர்களையும் அவமதித்துள்ளார். இதனை பர்ரி - வில்லியமின் நண்பர்களான அலி மற்றும் ஹாலே, எதிர்த்தனர். 

அப்போது வார்த்தை முற்றிப்போக அலி, தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலுடன் கையை ஓங்கினார். இதன் பிறகு பொறுமை இழந்த ஸ்டோக்ஸ், அலியை தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அலியுடன் இருந்த ஹாலேவிடமும் ஸ்டோக்ஸ் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதையும் கண்டிப்பா படிங்க 

இந்தியா - இங்கிலாந்து முதல் போட்டியில் கவனிக்கப்படாத விஷயங்கள்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP