ஐபிஎல் துவக்க விழா நிதியை இந்திய ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நிலையில், துவக்க விழாவை ரத்து செய்த பிசிசிஐ, அதற்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாயை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.
 | 

ஐபிஎல் துவக்க விழா நிதியை இந்திய ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நிலையில், பிரம்மாண்ட துவக்க விழாவை ரத்து செய்த பிசிசிஐ, அதற்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாயை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் மிகப் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல், இன்று சென்னையில் துவங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் முதல் போட்டியில் மோதுகிறது. வழக்கமாக, ஐபிஎல் முதல் போட்டி, துவக்க விழாவை தொடர்ந்து நடைபெறும். 

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஐபிஎல் துவக்க விழா கொண்டாட்டங்களை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்தது. மேலும், ஐபிஎல் துவக்க விழாவுக்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் நிதியை, இந்திய ராணுவத்துக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இதன்படி, ராணுவத்துக்கு ரூ.11 கோடி, சி.ஆர்.பி.எஃப்-க்கு 7 கோடி, கடற்படைக்கு ரூ.1 கோடி, விமானப்படைக்கு ரூ.1 கோடி என வழங்குகிறது பிசிசிஐ. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP