தோனியை பார்த்து மெர்சலான ஆடம் ஸாம்பா

பெங்களூரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்த ஆடம் ஸாம்பா அதிர்ச்சியடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

தோனியை பார்த்து மெர்சலான ஆடம் ஸாம்பா

பெங்களூரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்த ஆடம் ஸாம்பா அதிர்ச்சியடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் 47 ரன்கள் விளாச, கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், தோனி 40 ரன்கள் அடித்தார். 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி, 190 ரன்கள் எடுத்தது. 
 
தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஷார்ட் 40 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் தந்தார். அதை தொடர்ந்து வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல், 50 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்தார். இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் அடித்து வென்றது ஆஸ்திரேலியா. இந்த வெற்றியை தொடர்ந்து 2-0 என தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

 

 

இந்திய அணி தோல்வியடைந்தாலும் தோனியின் நேற்றைய சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்திய அணி பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா வீசிய 12-வது ஓவரின் 2வது பந்தில் தோனியை விக்கெட் கீப்பர் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார்.

ஆனால், அது நடக்கவில்லை. தோனி பந்தை மிஸ் செய்தாலும் 2.14 மீட்டர் அகலத்திற்கு தனது காலை எளிதாக விரித்து கிரீஸை தொட்டார். இவரின் திறமையைப் பார்த்து ஆடம் ஸாம்பா வாயைப் பிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP