இன்னைக்காவது ஜெயிப்பீங்களா கோலி?...ஏக்கத்துடன் ஆர்சிபி ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 | 

இன்னைக்காவது ஜெயிப்பீங்களா கோலி?...ஏக்கத்துடன் ஆர்சிபி ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஆர்சிபி அணிக்கு சறுக்கலாக அமைந்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. திறமை வாய்ந்த வீரர்களை வைத்துக் கொண்டும் படுகேவலமாக ஆடி வருவதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அணி வீரர்கள் ஒரு சேர ஆடினால் மட்டுமே கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பெங்களூரு ருசிக்க முடியும்.

கொல்கத்தா அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி வீரர் ஆந்த்ரே ரஸ்செல்லின் அதிரடியை இன்றும் தொடர்ந்தால் பெங்களூருவுக்கு பெப்ப்ப்பே...தான். மேலும், தினேஷ் கார்த்திக், உத்தாப்பா, ரானா நல்ல பார்மில் உள்ளனர். குல்தீப், சுனில் நரேன் சுழலில் மிரட்டி வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூரு அணியும், டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரில் அடைந்த தோல்வியை மறக்கடிக்ககூடிய வகையில் இன்றைய வெற்றி இருக்க வேண்டும் என்று கொல்கத்தா அணியும் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இன்றைய போட்டி பெங்களூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 22 முறை மோதியுள்ளன. அதில், பெங்களூரு 9  ஆட்டங்களிலும், கொல்கத்தா 13 போட்டிகளிலும் வெற்றியும் பெற்றுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP