இந்தியாவுக்கு ஒரு நியாயம்; பாகிஸ்தானுக்கு ஒரு நியாயமா?- பிசிசிஐ காட்டம்

ஆசிய கோப்பை அட்டவணையில் இந்தியாவுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 | 

இந்தியாவுக்கு ஒரு நியாயம்; பாகிஸ்தானுக்கு ஒரு நியாயமா?- பிசிசிஐ காட்டம்

ஆசிய கோப்பை அட்டவணையில் இந்தியாவுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூன் 24ம் தேதி 2018 ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி முதல் ஆசிய போட்டி நடக்கிறது. இந்திய அணி, தனது துவக்க ஆட்டத்தில், தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் செப்.18ம் தேதி மோதுகிறது. அதற்கு அடுத்த நாளான 19ம் தேதி அன்று, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்ள உள்ளன. 

ஆனால், இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு மட்டும், ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே, இரண்டு நாட்கள் ஓய்வு மற்றும் பயிற்சிக்கான இடைவெளி தாராளமாக விடப்பட்டுள்ளது. 

இதனை சுட்டிக்காட்டியுள்ள பிசிசிஐ, அட்டவணைக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. "இந்த அட்டவணை முட்டாள் தனமாக உள்ளது. இன்று ஒரு போட்டியிலும், அதற்கு அடுத்த நாளே மற்றொரு போட்டியிலும் இந்தியா விளையாடுகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் இரண்டு நாள் இடைவெளி உள்ளது. இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். 

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அட்டவணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். போட்டியை நடத்தும் நிர்வாகத்திற்கு, இது வருமானம் சம்மந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அட்டவணையில் சமமாக நடத்தும் முறையே முக்கியம்" என்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP