3வது டெஸ்ட்: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னேறியுள்ளது.
 | 

3வது டெஸ்ட்: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரில் 2-1 என வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்தது இந்திய அணி. 3வது போட்டியில் தோற்றால் டெஸ்ட் தொடரையும் இழக்க நேரிடும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து வெறும் 161 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 168 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி, மீண்டும் அசத்தலாக விளையாடி, 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் அடித்த கேப்டன் கோலி, இந்தமுறை சதமடித்தார் (103). 

521 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொண்டு 3வது நாள் முடிவில் களமிறங்கியது இங்கிலாந்து. 4ம் நாளான நேற்றைய விளையாட்டின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டை வைத்து இன்று முழுவதும் கடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், ரஷீத்(30) மற்றும் ஆண்டர்சன்(8) ஜோடி களமிறங்கியது. 10 நிமிடங்களிலேயே, அஷ்வினின் பந்தில், ஆண்டர்சன்(11) அவுட்டாக, இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP