3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்

பிரிஸ்டல் வழக்கு விசாரணை காரணமாக இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார்.
 | 

3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்

பிரிஸ்டல் வழக்கு விசாரணை காரணமாக இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நைட்-கிளப்பிறகு வெளியே ஸ்டோக்ஸ், இருவரிடம் சாலை சண்டையில் ஈடுபட்டார். அதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை இடைநீக்கம் செய்ததது. இதனால் ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை. 

இதன் பிறகு, நியூசிலாந்து டூரில் ஸ்டோக்ஸ் பங்கேற்றார். மேலும் ஐ.பி.எல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடினார். ஆனால், பிரிஸ்டல் வழக்கு விசாரணை காரணமாக இரண்டாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ஸ்டோக்ஸ் மீதான வழக்கு விசாரணை இன்னும் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. வருகிற 18ம் தேதி முதல் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. ஸ்டோக்ஸ் விசாரணை முடிவுக்கு முன்பாகவே இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால், அவர் 3-வது டெஸ்டிலும் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP