மாரடைப்பால் 21 வயது இளம் வீரர் மைதானத்திலேயே பலி!

கொல்கத்தாவை சேர்ந்த 21 வயதேயான இளம் வீரர் ஒருவர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உயிரிழந்தார்.
 | 

மாரடைப்பால் 21 வயது இளம் வீரர் மைதானத்திலேயே பலி!

கொல்கத்தாவை சேர்ந்த 21 வயதேயான இளம்  வீரர் ஒருவர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பைக்காரா என்ற கிளப் அணிக்காக விளையாடி வந்த அனிகித் ஷர்மா என்ற 21 வயது இளைஞர், மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் மருத்துவமனை சக வீரர்களும் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் எல்லோரும் மைதானத்தில் பயிற்சிக்காக கூடியிருந்தோம். நீண்ட நாட்களாகவே கால்பந்து விளையாட வேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்தார் ஷர்மா. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அனிகித் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்"என சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சக வீரர் கூறினார்.

"அவர் ஒரு சிறந்த வீரர். கடந்த வருடம் தான் இங்கு வந்தார். சிறப்பாக பீல்டிங்கும் செய்பவர், அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் விளையாடுபவர். இந்த சம்பவத்தால் நாங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளோம்" என்று அணியின் பயிற்சியாளர் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP