ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் : பெங்களூரு அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 | 

ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் : பெங்களூரு அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையில் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் மும்பை இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளன. ரோகித் சர்மா இல்லாத நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் 198 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது மும்பை. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொல்லார்ட் 83 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்யவும் உதவினார். காயம் காரணமாக விளையாட ரோகித் இன்றைய போட்டியில் விளையாடுவார் என அந்த அணி அறிவித்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவது மும்பைக்கு தெம்பாகவே இருக்கும்.

சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான், இதுவரை 5 தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகிறது. வெற்றிக்கு கிட்ட நெருங்கி தோல்வி அடைந்து வருவது அந்த அணிக்கு தொடர் கதையாகி வருகிறது. பட்லர்,  ஸ்டோக்ஸ், ஸ்மித் இருந்தும் இன்னும் அந்த அணி எழுச்சி பெறாமல் உள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்தில் ஆவது வெற்றி பெற்று, ராஜஸ்தான் ரசிகர்களை திருப்தி அடைய செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 18 ஆட்டங்களில் மோதி, அதில், மும்பை 10, ராஜஸ்தான் 8 வெற்றியும் பெற்றுள்ளன.

மொகாலியில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கோலி தலைமைலியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

இந்த தொடரில், பஞ்சாப் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அந்த அணி தோல்வி அடைந்தாலும், அனைத்து விதத்திலும் பலமாகவே உள்ளது. உள்ளூரில் அந்த அணியை வீழ்த்துவது கடினம். ஏனென்றால் நடப்பு தொடரில் உள்ளூரில் விளையாடிய பஞ்சாப் அணி 3 ஆட்டங்களில் பெற்றது வெற்றியே. காயத்தால் அவதிப்பட்டு வரும் கெயில் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் தானாம்.

நடப்பு தொடரில், இன்னும் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் பரிதாபத்திற்குரிய அணியாக பெங்களூர் உள்ளது. அந்த அணியை வெறுக்கும் ரசிகர்கள் கூட, வெற்றி பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். கோலி, வீரர்களை மாற்றியும் பார்த்தார், பல மாற்றங்களையும் செய்தும் பார்த்தார். ஆனாலும் வெற்றியை பெற முடியவில்லை. எஞ்சிய 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் இன்றைய ஆட்டம் பெங்களூரு அணிக்கு வாழ்வா? சாவா? என்றுள்ளதால், ஆட்டம் விறுவிறுப்பாகவே இருக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 22 முறை மோதி, அதில், பஞ்சாப் 12 , பெங்களூரு 10 வெற்றியும் பெற்றுள்ளன.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP