தோனியின் ஓய்வு?, கோலியிடம் பேச்சு: பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

சாம்பியன்கள் விரைவில் ஓய்வுபெற்றுவிட மாட்டார்கள் என்றும், விராட் கோலிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 | 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பிசிசிஐயின் 39ஆவது தலைவராக பொறுப்பேற்றுகொண்ட கங்குலி 2020 ஜூலை வரை பதவி வகிப்பார்.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பின் மும்பையில் செய்தியாளர்களுக்கு கங்குலி அளித்த பேட்டியில், ‘ஊழல் உள்ளிட்டவைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இடமில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. பிசிசிஐயின் நம்பகத்தன்மையில் சமரசத்திற்கும் இடமில்லை. மகளிர் கிரிக்கெட் அணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும், தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை, சாம்பியன்கள் விரைவில் ஓய்வுபெற்றுவிட மாட்டார்கள் என்று தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன், அவரிடம் நாளை பேசவுள்ளேன் என்றும் கங்குலி கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP