உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரணாய்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஹெச்.எஸ். பிரணாய்.
 | 

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரணாய்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஹெச்.எஸ். பிரணாய். 

சீனாவின் நஞ்சிங்கில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், 11-வது இடம் வகிக்கும் பிரணாய் 21-12, 21-11 என்ற நேர்செட் கணக்கில் நியூசிலாந்தின் அபினவ் மனோட்டாவை, 28 நிமிடத்தில் வீழ்த்தினார். பிரேசிலின் யகோர் கோயல்ஹோவுடன், 2-வது சுற்றில் பிரணாய் மோதுகிறார்.

இரட்டையர் பிரிவில், இந்திய கூட்டணியான மனு அத்ரி - சுமித் ரெட்டியும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சன்யோகிதா கோர்ப்பதே - ப்ரஜக்தா சாவந்த் இணை தோல்வி அடைந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP