உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வேன்: பி.வி.சிந்து உறுதி

இந்திய பேட்மின்டன் நாயகி பி.வி.சிந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரில் தங்கம் வெல்வது உறுதி என தெரிவித்துள்ளார். இத்தொடரில் இவர் 2 முறை வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வேன்: பி.வி.சிந்து உறுதி

 வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரில் தங்கம் வெல்வது உறுதி என பி.வி.சிந்து  தெரிவித்துள்ளார். 

இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து கடந்த ஆண்டுகளில் சில முறை தங்கப்பதக்கங்கள் அதிகமாக வெள்ளி பதக்கங்களையே பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் தொடரில் கூட அவர் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெள்ளி மங்கையாக திகழ்ந்து வரும் பி.வி.சிந்து, விரைவில் நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெல்வேன் என தெரிவித்துள்ளார். 

வரும் ஆகஸ்ட் மாதம் பேட்மின்டன் உலக  சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்வது குறித்து பேசி பி.வி.சிந்து, "கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த தொடரில் வெள்ளி பதக்கம் வென்று வந்தேன். இந்தாண்டு தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

இது மிக பெரிய தொடர், இதில் வெற்றி பெறும் வாய்ப்பை யாரும் எளிதாக விட்டுத்தர மாட்டார்கள். நான் சிறப்பாக விளையாட வேண்டும். அனைவரவது கனவும் டோக்கியோ 2020 பற்றி தான் இருக்கிறது. 

இதே போல ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஹிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறேன். கரோலினா மரின் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அந்த ஒரு காரணம் எனது பாதையை எளிதாக்கி விடாது' என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP