இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சித் தோல்வி!

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், தென் கொரிய வீராங்கனை சங் ஜி ஹியூனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
 | 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, தென் கொரிய வீராங்கனை வீராங்கனை சங் ஜி ஹியூனிடம் மோதினார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில இருக்கும் சங், 6ம் நிலை வீராங்கனையான சிந்துவுக்கு பலப்பரீட்சை கொடுத்தார். முதல் செட்டை தோற்றாலும், இரண்டாவது சுற்றை போராடி, 22-20 என கைப்பற்றினார் சிந்து. கடைசி வரை போராடி, 16-21, 22-20, 18-21 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியடைந்தார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரனீத், மற்றொரு இந்திய வீரரான பிரணாய்யை 21-19, 21-19 என வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP