ரஷ்ய ஓபன் அரையிறுதியில் சௌரப், மிதுன், குஹு-ரோஹன்

ரஷ்ய ஓபன் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டிக்கு சௌரப், மிதுன், ரோஹன் முன்னேறியுள்ளனர்.
 | 

ரஷ்ய ஓபன் அரையிறுதியில் சௌரப், மிதுன், குஹு-ரோஹன்

ரஷ்ய ஓபன் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டிக்கு சௌரப், மிதுன், ரோஹன் முன்னேறியுள்ளனர். 

வலடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய ஓபன் பேட்மின்டன் டூர் சூப்பர் 100 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், 8-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சௌரப் வர்மா, 36 நிமிடத்தில் 21-14, 21-16 என்ற நேர்செட் கணக்கில் 3ம் இடம் வகிக்கும் இஸ்ரேலின் மிஷா சில்பெர்மன்னை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு காலிறுதி ஒற்றையர் பிரிவில், மலேசியாவின் சத்தியஸ்தரனை 21-18, 21-12 என்ற கணக்கில் மிதுன் மஞ்சுநாதன் வென்றார். 

2ம் இடத்தில் இருக்கும் இந்திய இரட்டையர் பிரிவு இணையான ரோஹன் கபூர் - குஹு கார்க்கும், அரையிறுதிக்கு தகுதி அடைந்தனர். அடுத்த போட்டியில் இந்திய கூட்டணி, மலேசியாவின் செங் டாங் ஜியே - ஏன் வெய் பெக் இணையை எதிர்கொள்கிறது. இந்த மலேசிய இணை, இந்திய கூட்டணியான சௌரப் சர்மா - அனோஷ்கா பரிக்கை 30 நிமிடத்தில் வீழ்த்தியது.

இந்த தொடரில் இருந்து முன்னாள் தேசிய சாம்பியன் ரிதுபர்ணா தாஸ், வ்ருஷாலி கும்மாடி, சுபாங்கர் டே ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP