மலேசியா ஓபன்: துவக்க போட்டியில் சாய்னா, சிந்து வெற்றி

மலேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் துவக்க போட்டியில் சாய்னா, சிந்து வெற்றி பெற்றனர்.
 | 

மலேசியா ஓபன்: துவக்க போட்டியில் சாய்னா, சிந்து வெற்றி

மலேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் துவக்க போட்டியில் சாய்னா, சிந்து வெற்றி பெற்றனர். 

கோலாலம்பூரில் மலேசியா ஓபன் உலக டூர் சூப்பர் 750 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிறகு, முழு உடற்தகுதி பெறுவதற்காக உபர் கோப்பை போட்டியில் இருந்து விலகிய பி.வி.சிந்து, மலேசியா ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ளார். 

மகளிர் துவக்க போட்டியில் ஜப்பானின் அயா ஓஹோரியை எதிர்கொண்டார் சிந்து. உலகின் 14-வது இடத்தில் இருக்கும் ஓஹோரியை 26-24, 21-15 என்ற கணக்கில் சிந்து வென்றார். 3ம் இடத்தில் உள்ள சிந்து, அடுத்த போட்டியில்,  Mமலேசியாவின் யிங் யிங் லீ அல்லது சீன தைபேவின் சியாங் யிங் லியுடன் மோதுவார். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நேவால், 21-12, 21-16 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கின் இப் புய் யின்னை 42 நிமிடங்களில் வீழ்த்தினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP