பிவி சிந்துவை வீழ்த்தினார் சாய்னா

பிவி சிந்துவை வீழ்த்தினார் சாய்னா
 | 

பிவி சிந்துவை வீழ்த்தினார் சாய்னா


இந்தோனேஷியாவில் நடந்து வரும் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் இன்று மோதினர். இந்த போட்டியில், சாய்னா வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக்ஸ் போட்டியில், வெண்கலம் வென்ற சாய்னா, சமீப காலமாக காயம் காரணமாக தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வந்தார். ஆனால், இந்த போட்டியில் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வந்து, சிந்துவை 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். உலகின் 3ம் நிலை வீராங்கனையான சிந்து, இரண்டு செட்களின் துவக்கத்திலும் கடுமையாக போராடினார். ஆனால், சாய்னாவின் ஆக்ரோஷத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு பின், அரையிறுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ரச்சனோக் இன்டடோனுடன் சாய்னா மோதுகிறார். இருவரும் இதற்கு முன் 13 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், சாய்னா அதில் 8 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP