ஆசிய விளையாட்டு: பிவி சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது

பேட்மின்டன் ஆசிய விளையாட்டு இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
 | 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. இன்று மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து, சீன தைபேவின் தாய் டீஸு யிங்கிடம் மோதினார். இதில் பிவி சிந்துவை, 21-13, 21-17 என டீஸு யிங் வென்றார். இறுதிச் சுற்றில் தோல்வி கண்ட சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. 

இதன் மூலம், டீஸு யிங் தனது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டன் மகளிர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் பெற்றது இதுவே முதல்முறையாகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP