1. Home
  2. விளையாட்டு

பிரீமியர் லீக் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத்

பிரீமியர் லீக் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத்


இன்று மாலை நடைபெறவுள்ள பிரீமியர் லீக் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியுடன் நேற்று பெங்களூரு அணி, அரையிறுதியில் மோதியது. கடுமையாக போராடி, அஹமதாபாத் அணியை கடைசி இரண்டு போட்டிகளில் வீழ்த்தியது பெங்களூரு. 4-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பெங்களூரு வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. மற்ற அரையிறுதி போட்டியில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில், ஹைதராபாத் அணி, டெல்லியை துவம்சம் செய்தது.

சிறப்பான பார்மில் இருக்கும் ஹைதராபாத் அணியை வீழ்த்த, பெங்களூரு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like