1. Home
  2. விளையாட்டு

12-வது மலேசியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் லீ சோங் வெய்

12-வது மலேசியா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் லீ சோங் வெய்

மலேசியா ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி லீ சோங் வெய் வரலாற்று சாதனை படைத்தார்.

கோலாலம்பூரில் உலக டூர் சூப்பர் 750 பேட்மின்டன் தொடர் நடைபெற்றது. இத்தொடரில் நேற்று நடந்த ஆடவர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், 6ம் இடம் வகிக்கும் மலேசியாவின் லீ சோங் வெய் 21-17, 23-21 என்ற கணக்கில் ஜப்பானின் கெண்டோ மோமோடாவை 71 நிமிடத்தில் வீழ்த்தினார்.

இதன் மூலம், சோங் வெய், பேட்மின்டன் வரலாற்றில் 12-வது மலேசியா ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2004, 2005, 2006, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மலேசியா ஓபன் பட்டத்தை வெய் வென்றுள்ளார்.

மகளிர் பிரிவில், நடப்பு சாம்பியன் தைவானின் தாய் டீஸு யிங் 22-20, 21-11 என சீனாவின் ஹி பிங்ஜியாவை தோற்கடித்து, தனது 3-வது மலேசியா ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

மலேசியா ஓபன் சாம்பியன்கள்:

ஆடவர் ஒற்றையர் பிரிவு: லீ சோங் வெய் (மலேசியா)

கலப்பு இரட்டையர் பிரிவு: செங் சிவெய் - ஹுவாங் யகிலோங் (சீனா)

மகளிர் இரட்டையர் பிரிவு: மிசாக்கி மட்சுட்டோமோ - அயகா தகஹாஷி (ஜப்பான்)

மகளிர் ஒற்றையர் பிரிவு: தாய் டீஸு யிங் (தைவான்)

ஆடவர் ஒற்றையர் பிரிவு: டகேஷி கமுரா - கெய்கோ சோனோடா (ஜப்பான்)

newstm.in

Trending News

Latest News

You May Like