1. Home
  2. விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: களத்தில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த்


இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு, தாய் டீஸு யிங்கை வீழ்த்தும் மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டோக்கியோவில் இன்று முதல் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் டூர் சூப்பர் 750 டோர்னமெண்ட் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்து, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தாயை வீழ்த்திய பிறகு, அவரிடம் 6 முறை தோற்றுள்ளார் சிந்து. இந்த நிலையில் ஜப்பான் ஓபன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், தாயுடன் சிந்து மோதுவார்.

சிந்து குறித்து பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் கூறுகையில், "தாயை வீழ்த்த சிந்து நெருங்கிவிட்டார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். இந்த டைட்டிலை அவர் வெல்வார் என்று நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இந்த தொடரில் இருந்து விலகுவதாக கடைசி நிமிடத்தில் சாய்னா நேவால் அறிவித்தார். சீனா ஓபன் போட்டியில் பங்கேற்க அதிக பயிற்சி தேவைப்படுவதால், இதில் இருந்து விலகி உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜக்கா வைஷ்ணவி போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

ஆடவர் பிரிவில் சமீபகாலமாக தடுமாறி வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் சுற்றில் சீனாவின் ஹுவாங் யூக்ஸிங்குடன் மோத இருக்கிறார். ஹெச்எஸ் பிரணாய், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டைனுடன் மோத உள்ளார். சாய் பிரனீத், தொடரில் இருந்து விலகினார்.

இரட்டையர் பிரிவுகளில், சாத்விக் சாய்ராஜ் - சீராக ஷெட்டி; சுமித் ரெட்டி - மனு அத்ரி; அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஆகியோரும் களத்தில் இறங்க உள்ளனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like