1. Home
  2. விளையாட்டு

சிந்துவை எதிர்த்து விளையாடுவது சுலபம் அல்ல: சாய்னா நேவால்

சிந்துவை எதிர்த்து விளையாடுவது சுலபம் அல்ல: சாய்னா நேவால்

பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாடுவது சுலபமானது அல்ல என காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 66 பதக்கங்களுடன் 3ம் இடத்தை பிடித்தது. இதில் 26 தங்கப்பதக்கங்கள் அடங்கும்.

காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளில் நடந்த மகளிருக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து ஆகியோர் மோதினர். இதில் சாய்னா 3-1 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

இதுகுறித்து சாய்னா நேவால் கூறும்போது, ஒலிம்பிக் பதக்கத்திற்கு பிறகு இந்த பதக்கம் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதை என் தந்தை, தாய் மற்றும் என் நாட்டிற்கும் சமர்ப்பிக்கின்றேன். கடந்தாண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாக சரியாக விளையாட முடியாமல் போனது. தற்போது இந்த வெற்றி மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

இறுதிப்போட்டியில் சிந்துவை எதிர்த்தி விளையாடினேன். தொடர்ந்து 10-12 நாட்களாக விளையாடியதால் அது மிகவும் கடினமான போட்டியாக தான் இருந்தது. சிந்து உயரமாக இருப்பதால் அவருக்கு அது பெரிய பலம். நான் ஓடி ஓடி விளையாட வேண்டும்.

கடந்த சில மாதங்களில் நான் 5 கிலோ குறைந்துவிட்டேன். இந்தியாவை பொறுத்தவரை தோல்வியடைந்து விட்டால் உடனே சாய்னாவிற்கு வயதாகி விட்டது, அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறிவிடுவார்கள்.

இறுதிப்போட்டியின் போது எங்கள் மீது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சர்வதேச தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ளவரை எதிர்த்து விளையாடுவது அவ்வளவு சுலபமானது அல்ல. எனக்கு மிகவும் சவால் கொடுக்க கூடிய போட்டியாகவே அது இருந்தது. எனது பயிற்சியாளர் கோபிக்கு நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like