இந்தோனேசியா பேட்மிண்டன்: சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்...!

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் பிங் ஜியோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 | 

இந்தோனேசியா பேட்மிண்டன்: சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்...!

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் பிங் ஜியோவை  எதிர்கொண்டார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சாய்னா, பின்னர் அதிரடியாக விளையாடி  18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதி சுற்றுக்கு சாய்னா முன்னேறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP